முருகேசன் இருக்காறா?”

சுரேஷ் ராஜகோபால்


கரூர் பக்கத்திலுள்ள பட்டவாத்தலையில் குமாரசாமி விவசாயக் கூலியா வேலை பாத்தார். இவருக்கு ஒரு காணி நிலம் இருந்தது. அதில பெரிசா ஒண்ணும் வருமானம் பக்க முடியலை. நல்ல ரஸ்தாளி வாழை மரம் கொஞ்சம் நட்டார். அது பல்கி வாழையடி வாழையாக வந்தது மகிழ்ச்சி. எதோ வருமானம், உழைப்பு அதிகம் இல்லாமலே வந்தது. அந்தத் தோட்டத்துக்கு நடுவே ஒரு ஓட்டு வீடு, அவர் அப்பா காலத்தியது, வாழை தோப்புக்கு தேவையான தண்ணீர் இவர் வீட்டு கிணத்திலேயே கிடைத்தது.

அவர் மனைவி அலமேலு, 52 வயசுலேயே, மாரடைப்பு வந்து இறந்து போனாங்க. குமாரசாமிக்கு அதுக்கப்புறம் தான் உலகமே தன் கைவிட்டு போன மாதிரி ஆச்சு.

ஒரே பையன், பெரு முருகேசன், பக்கத்துக்கு அரசுப் பள்ளியில நல்ல படிச்சான், நல்ல மார்க் வாங்கினான்.

மேலே படிக்க நிலத்தை அடமானம் வைச்சு பங்குல கடன் வாங்கி, என்ஜினீயர் ஆக்கி அழகு பார்த்தார். உடனே நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைத்தது. அதுவும் சென்னையிலே.


முருகேசன் ரூம்ல தங்கி வேலை பார்த்தான், அப்பாவுக்கு பணம் மாசாமாசம் சரியா அனுப்பிடுவான்.


அவன் இருந்த தெருவிலே ஒரு பெண்ணை காதலித்தான், அந்தப் பெண்ணின் அப்பாவும் இவனை மடக்கிப் போட திருமணத்துக்குச் சரி சொல்லிட்டார். திருமானதுக்குப் பிறகு அவன் போக்கு மாறியது, அப்பாவுக்கு பணம் அனுப்புவதையம் ,கடித்தம் போடுவதையும் நிறுத்திவிட்டான்

#

தாடி வைத்த பெரியவர் ஒருவர், முருகேசன் வீட்டு அழைப்புமணியை அழுத்தியபின், வெளிப்பட்டவரிடம் கேட்டார். பெரியவர் உடுத்திய உடையும் சரி, தலை முடியும், சரி சுத்தமாக கலைந்திருந்தது. பஞ்சத்தில் அடிபட்டவர் என்பது தெளிவாக தெரிந்தது, யாரோ யாசகம் கேட்டு வந்துவிட்டாரென நினைத்து “இப்ப ஒண்ணும் கிடையாது போயிட்டு வாங்க” முருகேசன்.


“இது முருகேசன் வீடுதானே? பெரியவர்.

“உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்?” முருகேசன்

“நான் பட்டவாத்தலை குமாரசாமியோட நண்பன், அவரோட பிள்ளை முருகேசனை பாக்கத்தான் வந்தேன், ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும்… அதுதான் கேட்டேன்” பெரியவர் மென்னு முழுங்கினார்.

அப்பா எதோ கடன் கிடன் வாங்கி பாக்கியை வசூலிக்க என்னை கை காட்டி விட்டார் போல என முருகேசன் நினைத்து “என்ன பெரிசு அந்த பட்டவாத்தலை ஆளு பணம் பாக்கி ஏதாவது வச்சிருக்கரா ?”

“இல்லிங்க தம்பி, முருகேசன் ஐயாவைத்தான் பார்த்தது ஒண்ணு அவசரமா சொல்லணும்” பெரியவர்

“இப்ப அவரை பாக்க முடியாது, வேலை விஷயமாய் வெளியூர் போயிருக்கார் “ முருகேசன்

“அவங்கப்பா இறந்து போய்ட்டாரு” பெரியவர்
.
“அப்படியா, அவரை புதைக்க காரியம் செய்ய ஒரு இரண்டாயிரம் தாரேன், போய் கருமாதி எல்லாம் செய்துடுங்க” முருகேசன்.

அதற்குள் அடுத்த அறையிலிருந்து ஒரு பெண் குரல் “என்னங்க” அழைத்தது. “என்ன” என்று பார்த்தபடி அறைக்குள் நுழைய மனைவி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள். “அப்பா இறந்துட்டாராம்”

“ஹூம் கேட்டது, இரண்டாயிரம் ரொம்ப அதிகம் ஒரு ஆயிரம் கொடுத்து ஆனுப்புங்க போதும்”

வெளியே ஆயிரம் பணத்துடன் பெரியவரிடம் வந்தான், பெரியவர் பணத்தை வாங்க மறுத்துச் சொன்னார், நானே என் செலவில அடக்கம் செய்துடறேன்.

“முருகேசன் இருக்காறா?” என்று முனகியபடி சென்றார்

      #