இலக்கிய இன்பம் 3
கோவை எழிலன்
இராமாயண காவியத்தில் இராவணன் வில்லனாக இருந்தாலும் பல நற்பண்புகள் கொண்டவனாகவே அவனை வால்மீகியும் கம்பனும் காட்டுகின்றனர்.
அவனின் அந்நற்பண்புகளை கடைந்து எடுத்து இப்பாடலில் காட்டுகிறார் பாவேந்தர்
தமிழ் மறைகள் நான்கு என்று எவற்றைக் குறிப்பிடுகின்றார் என்று புரியவில்லை.
”தென் திசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடா!
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும்
கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை!
என் தமிழர் பெருமான்!
இராவணன் காண்! அவன் நாமம்
இவ்வுலகம் அறியும்
………………………… தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை
வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன் மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்”
