
ஒன்று
ஒன்று
ஒன்றாக
ஒன்பது இரவுகள்
மகிஷம் என்ற மனிதனுடன்
பொறாது போராடி
வென்று
விஜயதசமியன்று
சிங்கத்தின் சிவந்த நாக்கு
சாட்சி சொல்ல
மீண்டும் யுத்தம் வரும்
வரும்
வரும் –
ஒன்று
ஒன்று
ஒன்றாக
ஒன்பது நாட்கள்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
பொறாது போராடி
விஜயதசமி கொண்டாடி
மகிஷம் என்ற மனிதன்
மாய மறுத்து
மீண்டும் உயிர் பெற்றெழ
யுத்தம்
வரும்
வரும்
என்று
கனன்று அலுப்புற்று
இந்த விஜயதசமி அன்று
மகிஷம் என்கிற மனிதனை
மணந்து கொண்டுவிட்டாள்
இனி யுத்தம்
ஒன்பது நாட்களுக்கு
மட்டுமல்ல
நாற்றங்கால்
மே – 1974
