ஒரு நாயின்‌ காது – புக்மார்க் /எ.யாஸ்மின் பேகம்

புக் மார்க் என்பதற்கு பக்கக் குறி என்றும் புத்தகக் குறி என்பதாகும். இருந்தாலும் , பலர் நயக்குறி என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சிலரோ‌ பக்க விளம்பி என்கிறார்கள். எதுவாயினும் புக் மார்க் என்று சொல்வதே சிறந்ததாக தோன்றுகிறது.

அன்றைய‌ காலத்தில் நாம் படிக்கும் போது வாசிப்பை இடையில் நிறுத்தி விட்டு செல்லும் போதும் பக்க அடையாளமாக ஒரு பக்க விளம்பியை சொருகும் பழக்கம் யாரிடமும் இருந்திருக்க வில்லை. மாறாக ஒரு பக்கத்தின் நுனியை மடித்து விடுவார்கள் என் அம்மாவும் அப்படித்தான் அப்படி மடித்து மடித்து பல புத்தகங்கள் நுனியில் கிழிந்து போயிருக்கிறது.

புத்தகம் என்பது ஒருவரோடு முடிவதில்லை பல கைகள் மாறுவது அப்படி அடிக்கடி பக்க நுனிகள் மடித்தால் புத்தகம் பாழாகிவிடும்.

இப்படி பல பக்கங்கள் மடிபட்ட நிலையில் இருக்கும் புத்தகத்தை ஆங்கிலத்தில் ‘Dog Eared books’ . ஒரு நாய் 🐶 காது என்பது ஒரு புத்தகத்தின் மடித்த மூலைக்கான சொல்லப்படும் வாக்கியம்.

பலர் வீட்டில் புக் மார்க்காக கோரப்பாயின் குச்சிகளும், பழைய தீர்ந்து போன பால் பாயின்ட் பேனா ரீஃபில் மற்றும் உல்லன் நூல். புத்தகக் குறியின் முக்கியத்துவம் புத்தகம் அதிகம் படிக்க நேரும்போது தான் தோன்றுகிறது.

பெண்கள் பல வேலைகளுக்கு நடுவே கிடைக்கும் நேரத்தை வகுத்தும் மேலாண்மை செய்தும் அதில் படிக்கும் சில பக்கங்கள், கணவர் வருகை தெரிந்ததும் அவசரமாக மூடி வைக்கும்போது இந்த புக் மார்க் தேவைப்படுகிறது.

கணவருக்கு செய்ய வேண்டிய பணிகளை முடித்துவிட்டு அக்காடா என்று படுக்கும் போது விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தூண்டும் மனதில் இந்த புக் மார்க் பெரிதும் உதவுகிறது. ஆண்களோ மூச்சு விடாமல் ஒரு குறு நாவலையோ ஒரு புத்தகத்தை படித்து விடுவார்கள்.

ஒரு சிம்பிளான புக் மார்க் கல்யாண அழைப்பிதழ் அல்லது வாழ்த்து அட்டை இதை வீணாக்காமல் நீளமாக 10-15 செ.மீ அளவுக்கு வெட்டிவிட்டு அதில் ஸ்கெட்ச் பேனாவால் ஏதாவது டிசைன் செய்தால் போதும் . இது ஈஸியான அழகான ஒரு புக் மார்க ரெடியாகி விடும். நான் அப்படித்தான் என்னுடைய புத்தகங்களுக்கு புக் மார்க் என்று நிறைய வைத்திருக்கிறேன். எல்லாமே அழைப்பிதழ்களில் செய்யப்பட்டதுதான்.

                  .