வேஷம்/ஒசாமு தாசாய்

மொழிபெயர்ப்பு : க.நா.சு

நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும்
என்னை அறிவாளி என்றார்கள்
நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும்
என்னைச் சோம்பேறி என்றார்கள்.
நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள்.
நான் பொய்யன் போல வேஷம் போட்டபோது
அவர்கள் எல்லோரும் என்னைப் பொய்யன் என்றார்கள்.
நான் பணக்காரன் போல நடந்துகொண்டபோது
அவர்கள் என்னைப் பணக்காரன் என்றார்கள்.
நான் எதையும் லட்சியம் பண்ணாதவன் மாதிரி வேஷம் போட்டபோது
நான் எதையும் லட்சியம் பண்ணாவதன் என்றார்கள்.
நானும் அறியாமலே, மனவலி தாங்காது நான் முனகியபோது
நான் துயருற்றவன் பேல வேஷம் போடுகிறேன் என்றார்கள்.

இலக்கிய வட்டம்
31.07.1964