வீண்பேச்சு/க.மோகனரங்கன்

என் காதுகளைக் குறி வைத்து
எதற்காக கத்துகிறீர்கள்?
எனது இதயமோ
முழுவதும் செவிடு.
எப்போதுமது
சொற்களை
மொழிபெயர்த்து,
மெளனமாகவே
புரிந்துகொள்கிறது.