பீட் கவிதை – ஆலன் கின்ஸ் பெர்க்

மொழி பெயர்ப்பு : க.நா.சு

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

“எந்த ஐந்து தன்னைத்தானே பெற்றுக் கொள்கிறது?”
பிரபஞ்சமே பைத்தியக்காரத் தனமானதுதான்.
-சற்றே பைத்தியக்காரத் தனமானது தான்.

இரண்டு பக்கங்களிலும்
இரண்டு பிராக்கட்டுகளாக
நகர்ந்து சுழண்டு விழுந்துவிடும்
-விழுந்து இறந்து விடும்.

குருடான லோகத்தாலான குழாய்
ஜில்லிட்டுத் தரையில் கிடக்கிறது
தலையும் வாலும் இல்லாமல்
புல்லிலே
கால் விரல்களை
லேசாக ஆட்டுகிறது.

ஆயிரங் கால் பூச்சியின் கறுப்புத்தலை
பல அங்குலங்கள் நகர்ந்து
மச்சு பிச்சுக் கோயில் படியேறி
வால் அப்பால் கிடப்பதைக்
காண எட்டிப் பார்க்கிறது.
பிரபஞ்சத்தின் தலையும் வாலும்
மூன்றாகத் துண்டிக்கப்பட்டன.

  • இலக்கிய வட்டம்