குறுங்கவிதைகள்

 —————————

நாகேந்திரபாரதி 

சுயம் 
—————
உள்ளேயும் வெளியேயும் முட்கள் 
ஒளிப்பதும் ஒழிப்பதும் 
விருப்பம் 

அடிமாடுகள் 
———————
எப்போதும் போலத்தான் 
அசை போட்டபடி 
லாரியில் 

அளவு 
—————–
சும்மாயிருந்து பழகிப் போனதால் 
சும்மா இருக்கப்
 பிடிக்கவில்லை