
தமிழில் : க.நா.சு
இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்.
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.
இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப் படுத்துகின்றன.
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு
ஜனங்கள் இடம்விட்டு இடம் பெயர்கின்றனர்.
வீட்டு நினைவுகளையும் வாந்தியெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.
இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!
(இலக்கியவட்டம்)
