
ஆண்டவன் கொன்றான் அசுரனை
ஆண்டு தோறும் தீபாவளி
அசுரர்கள் இன்று அதிகம்
அசையா சிலையாய் ஆண்டவன்
கட்டுக் கதைகள் புராணம்
விட்டுச் சென்றார் சிலரும்
கட்டியவர் மாண்டு போனார்
கட்டிக் கொண்டு அழுகிறோம்
கொள்ளை அடிப்பவர் நாட்டில்
கொள்ளையில் பங்கு கொடுக்க
வாங்கிக் கொண்டு ஆண்டவன்
தாங்கிப் பிடிக்கிறான் அவர்களை
அரண்மனை போன்ற வீட்டில்
அரசர்கள் போலே வாழ்கிறார்
கொடுக்க மனமும் இல்லை
கொடுத்தது இறைவன் என்கிறார்
தர்மம் தொலைந்து போனது
தரும தரிசனம் ஏழைகள்
கர்ம வினையால் வறுமையாம்
விரும்பியது கிடைக்காது என்கிறார்
மறைந்து வாழ்ந்தது போதும்
இறைவன் வெளியே வரனும்
அறத்தின் வழியில் வாழ்வோரை
மறவாமல் காத்து நிற்கனும்
