ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்

22.10.2022

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 47

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

 மோகினி:  இப்போதெல்லாம் உங்கள் எழுத்து யார் மனதையோ புண்படுத்துவதாகத் தோன்றுகிறது.

அழகியசிங்கர் :சமீபத்தில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஜெகன் :   உங்களைப் பொறுத்தவரை சிறுபத்திரிகை என்று எதை வகைமைப் படுத்துகிறீர்கள்.

மோகினி :  இத்தனைப் பக்கங்கள் இருக்க வேண்டுமென்று எதாவது திட்டமிருக்கிறதா?

அழகியசிங்கர் : இல்லை.  ஆனால்  கல்குதிரை,  மணல் வீடு பத்திரிகைகளை எப்படி வைகப் படுத்துவீர்கள்.

மோகினி :  தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அழகியசிங்கர் : அவை சிறுபத்திரிக்கைகள்தான்.  ஆனால் 16 பக்கங்களில் கொண்டுவந்த ஆத்மாநாமின் 'ழ' பத்திரிகையும் சிறுபத்திரிகைதான். மணல்வீடு, கல்குதிரை பத்திரிகைகள் ஹைபிரீட் அதாவது மேலாதிக்க சிறுபத்திரிகைகள்.

ஜெகன் :  புரியவில்லை.

அழகியசிங்கர்: லோகல் எழுத்தாளர்களை விட ஃபாரின் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு என்று மொழிபெயர்ப்பு மயமாக இருக்கும்.

ஜெகன் :  சில சிறுபத்திரிகைகள் தமிழில் வருகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகளைப் பார்த்துப் பிரதி எடுத்திருப்பார்கள்.

அழகியசிங்கர் : அதேபோல் இலக்கியப் பத்திரிகைகளைப் பார்த்து பிரதி எடுக்கிற சிறுபத்திரிக்கைகளும் உண்டு.

மோகினி :  என்ன இருந்தாலும் படிக்கிறவர்கள் குறைவு.

ஜெகன் :   ஆமாம். 

மோகினி :  எல்லாம் புரிந்து கொண்டுதான் பத்திரிகை நடத்துகிறோம்.

அழகியசிங்கர் : நான் திரும்பத் திரும்ப விருட்சம் பழைய இதழ்களில் வெளிவந்த கவிதைகளை வாசிக்கிறேன்.  என்ன அபாரமான முயற்சி இது என்று எனக்குத் தோன்றும்.

ஜெகன் : உண்மைதான்.

அழகியசிங்கர் :  இந்த விருட்சம் டெய்லி  இருக்கிறதே இது ஒரு பல்சுவை பத்திரிகை.  ஆனால் அச்சில் வரும்போது இது சிறுபத்திரிகையாக மாறி விடும். டெய்லியில் வருகிற பல விஷயங்கள் வராது. 

மோகினி : பல்சுவைப் பத்திரிகை என்றால்...

அழகியசிங்கர் :  எல்லாம் இருக்கும். யோகி ராம்சுரத்குமார் குறித்து கட்டுரையிருக்கும்.  சினிமா கட்டுரை இருக்கும். அரசியல் இருக்கும்.  தீவிர கதை, கவிதைகள் இருக்கும்.  ஜனரஞ்சகமாக எழுதப்படுகிற எழுத்துக்கும் இதில் இடம் உண்டு.  ஆனால் அச்சுப் பத்திரிகையில் இதெல்லாம் கிடையாது.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.
                                              இரவு 9.34