தீபாவளி /ப.மதியழகன்

ஊரெங்கும் வெடிச்சத்தம்
நா ஊறும் பலகாரங்கள்
அணிந்து மகிழப் புத்தாடைகள்
வாழ்த்து சொல்லும் சுற்றங்கள்
திருநாளன்று வெளியாகும் திரைப்படங்கள்
விடுமுறையால் உண்டான உற்சாகம்
எல்லா அலைவரிசைகளிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள்
கண்ணுக்கு விருந்தாகும்
கிரிக்கெட் தொடர்கள்
வானெங்கும் வர்ண ஜாலம்
தித்திக்கும் தீபாவளி
திகட்டாமல் இருக்கட்டும்
நாளை பற்றிய கவலையின்றி
நாம் கொண்டாடுவோம் தீபாவளி
அனைவருக்கும் தீபத்திருநாள்
நல்வாழ்த்துக்கள்