எனக்கு ஒரு கை/க நா சு

என் கையைப் பிடித்துக் கொண்டு
என் பேத்தி
தாத்தா தாத்தா என்கிறாள்.

எனக்குப் பிடித்துக் கொள்ள
ஒருகை
எங்கேயும் காணோமே.