இனிக்கும் தமிழ் – 148/டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம்

“கொதிக்கும் நீரில் ஆமை” போல என்கிறார் நாவுக்கரசர்
இது எதற்கான உவமை..கொதிக்கும் நீரில் ஆமை என்ன செய்யும்..
இதற்கான விளக்கம் என்ன..

ஒரு அண்டாவில் நீரினை வைத்து கொதிக்க வைக்கிறோம்.அப்போது அதில் தவறி ஆமை ஒன்று விழுந்து விடுகிறது.நீர் மெதுவாக சுட ஆரம்பிக்கிறது.”சில்”லென்ற நீரில்..மிதமான சூடு..ஆமைக்கு இன்பம்.

ஆனால்..சூடு அதிகமாக..அதிகமாக தாங்க முடியாமல்..இறுதியில் வெந்து மடிகிறது.

அந்த முட்டாள் ஆமைக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ? புலன்கள் தரும் இன்பம்
தான் வெது வெதுப்பான நீர். சுகமாக இருக்கிறதே என்று அது வேண்டும், இது
வேண்டும் என்று அலைந்து தேடி சேர்க்கிறோம். இது எல்லாமா சந்தோஷத்தை
தருகிறது ?

நாவுக்கரசர் பாடலைக் காண்போம்

வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.

பொருள்

வளைத்து நின்று – சுற்றி நின்று, தப்பிக்க முடியாமல் வளைத்து நின்று
ஐவர் கள்வர்- ஐந்து (புலன்களாகிய) கள்வர்கள்
வந்து எனை – வந்து என்னை நடுக்கம் செய்யத் – பயம் உண்டாக்க
தளைத்து – பிணைத்து, (கட்டு) .( ஐம்புலன்களும் நம்மை கட்டிப் போடுகின்றன.)வைத்து -வைத்து உலையை ஏற்றி – நீரை கொதிக்க விட்டு
தழல் எரி மடுத்த நீரில்- தீயினால் சூடாகும் அந்த நீரில் (மடுத்தல்
என்றால் எரிச்சல் உண்டாக்குதல்)திளைத்து நின்று ஆடுகின்ற -சுகமாக அந்த நீரில் ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன் – (மட) ஆமை போல் தெளிவு இல்லாதேன் இளைத்து நின்று ஆடுகின்றேன் – துன்பப்பட்டு ஆடுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே – நான் என்ன செய்யப்போகிறேனோஆகவே சுகம் வரும் போது ….அந்த சுகம் அப்படியே இருக்குமா…இல்லை அதுவே துன்பத்திற்கு இட்டுச் செல்லுமா என்று….யோசிப்போமாக

                                   -