ஓஷோவின் ஞானக் கதைகள்

  1. ஒரு தையல்காரன் இருந்தான். அவன் பெயர் சும்பாச்சு.

அவனிடம் ஒருநாள் தான் தைக்கக் கொடுத்திருந்த மேலாடையை வாங்குவதற்காக ஒருவன் வந்திருந்தான்.

வந்தவன் தைத்து முடிக்கப்பட்ட ஆடையை அணிந்து பார்த்துவிட்டு, ஒரு கை மற்றொரு கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.

அதைப் பார்த்து சும்பாச்சு தையல்காரன் சொன்னான்:
”அதனாலென்ன? எதற்காக இவ்வளவு சங்கடப்பட்டுக் கொள்கிறீர்கள்? இந்த ஆடையைப் பாருங்கள். எவ்வளவு கலையம்சம் கொண்டதாக இருக்கிறது. ஒரு சிறிய குறைபாட்டுக்காக நீங்கள் அதிகமாகச சங்கடப்பட்டுக் கொள்கிறீர்களே! உங்கள் கையை சற்று உள்ளே இழுத்து வைத்து கொண்டால் போதும், கைப்பக்கம் சரியாகிவிடும்!”

பத்தும்

அந்த மனிதனும் அது மாதிரி முயற்சி செய்து கையை
கையை சற்று உள்ளே வைத்துக் கொண்டபோது , அதிகப்படியாக துணி முதுகுப்பக்கம் சேர்ந்திருப்பதை உணர்ந்தான்.

“இப்பொழுது முதுகுப் பக்கம் இவ்வளவு அதிகமாக துணி குவிந்து விட்டதே?” என்றான்.

”அதனாலென்ன? நீங்கள் சற்றுக் கூனிக் கொண்டால் இது சரியாகிவிடும். இந்த ஆடை மிகவும் கலையம்சம் கொண்ட வேலைப்பாடுடையது. ஆகவே, இதை இனி மாற்றி அமைக்க நான் தயாராக இல்லை. இது இப்போது மிகவும் அழகாக இருக்கிறது” என்றான், தையல்காரன்.

ஆடை வாங்க வந்தவனும் அந்தப் புதிய ஆடையை அணிந்து சற்று கூனியவாறு நடந்து கடையை விட்டு வெளியேறினான்.

அவன் தன் வீட்டை நோக்கி இவ்வாறு நடந்து செல்லும்போது வழியில் ஒருவன் அவனிடம், “இந்த ஆடை மிகவும் அழகானதாக இருக்கிறது. நான் நிச்சயமாக சொல்லுவேன், இது சும்பாச்சு தையல்காரனாலே தைக்கப்பட்டதென்று”
என்று சொன்னான்.