சாவு – 2 /க நா சு

சாவதென்பது அப்படி ஒன்றும்
சுலபமான காரியம் அல்ல.
உலகத்தில் உயிர் வாழ்பவர்கள் எல்லோரும்

சாகத்தான் போகிறார்கள்
ஆனாலும்
சாவதென்பது அப்படி ஒன்றும்
சுலபமான காரியம் அல்ல.

பௌதிகத்தில் ஒரு விதி –
இயற்கைக்குத் துளியும் பிடிக்காது
என்று, அதனால் தான்
சாவதென்பது அப்படி ஒன்றும்
சுலபமான காரியமாக இல்லையோ?
இயற்கை செத்தவன் இடத்தை இட்டு நிரப்ப
வேறு ஒரு ஆளைத் தேடுகிறது.

ê