
அதிகாலைப் பொழுதில் ஒரு எறும்புக் கூட்டம் இரைதேட பொந்திலிருந்து வெளி வந்தன.
காலைப் பனிப்படலத்தால் மூடிய இலைகளையுடைய செடிகளை அவை கடந்து சென்றன.
அவற்றில் ஒரு எறும்பு அந்த பனித்துளிகளைக் காட்டி, “இவை என்ன? எங்கிருந்து வந்தவை?” என்று மற்ற எறும்புகளிடம் கேட்டது.
அதற்கு அவற்றில் சில, ‘அவை பூமியிலிருந்து வந்தவை’ என்றும், மற்றும் சில ‘கடலிலிருந்து வந்தவை’ என்றும் கூறின.
இவ்வாறு கூறிய எறும்புகள் இரு அணிகளாப் பிரிந்தன. தாங்கள் சொல்வது தான் ‘சரி’ என்று சண்டை போட ஆரம்பித்தன.
அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள ஒரே ஒரு எறும்பு அவற்றிடையே எழுந்து
நின்றது.
