
நேற்று முதல் மழை
அமைதியான ஆரம்பம்
நின்று நிதானமாக
ஒய்வு இல்லாமல்
வேகமெடுத்துப் பெய்கிறது பெருமழை
கொஞ்சமும் இடைவெளியில்லாமல்
கொட்டித் தீர்க்கிறது, தன்பணி
செவ்வனே செய்கிறது
இத்தனை தண்ணீரை
எங்கே ஒளித்து வைத்திருந்தது
ஐப்பசியில் அடைமழையாம்,
அதென்ன தேனடையோ?
தேவைக்கு மேலே மழையும்
அலுத்துப் போச்சு
இப்போது பெய்யாவிட்டால்
எப்போது பெய்யுமோ ?
சரி பெய்யட்டும் இப்போது!.
சாலை சோலை எல்லாம் மிதக்குது
வீட்டுக்குள்ளும் மழைநீர் வெள்ளம்
கண்ணுக்கு எட்டிய தூரம் வெள்ளநீர்
ஒதுங்க இடமின்றி எம்மக்கள் துடிக்கிறார்கள்
எங்கும் நேர்தல்கண்டு அதுவே
பகையாக தெரியுது
இயற்கையே இது உன்பணி
நிறுத்தச் சொல்ல நான் யார்?
இன்று மழையே நின்று
பிறிதொரு நாள்
உன்விருப்பம் போல் பெய்
