நாயும் சேவலும் பயணம் புறப்பட்டன. மாலையில் சேவல் ஒரு மரத்தின் மீது உறங்கச் சென்றது, நாயோ மரத்தின் கீழ் வேர்களுக்கு இடையே படுத்துக் கொண்டது. நேரம் வந்த போது சேவல் கூவத் தொடங்கியது. இதைக் கேட்டு அங்கு வந்த நரி ஒன்று, சேவல் இத்தகைய இனிய குரலைக் கொண்டுள்ளதற் காகத் தான் அதற்கு மரியாதை செய்யக் கீழே இறங்கி வர வேண்டும் எனச் சொன்னது.
“நீ முதலில் காவல்காரனை எழுப்ப வேண்டும்” என்றது சேவல். ”அவன் வேர்களுக்கு இடையே உறங்குகிறான், அவன் எழுந்ததும் நான் கீழே வரு கிறேன்.”
காவல்காரனைப் பார்த்த நரி ஊளையிடத் தொ டங்கியது. நாய் குதித்தெழுந்தது. அதுதான் நரிக்கு முடிவாக அமைந்தது.
(எறும்பும் புறாவும் தொகுப்பிலிருந்து)
