
வேணுகோபால் சர்மாதான் வள்ளுவர் படத்தை வரைந்தவர்.40 ஆண்டுகள் வள்ளுவத்தை ஆய்ந்து ஆய்ந்து அதிலிருந்து உருவான படமே இது….படம் வரைந்த ஆண்டு 1960 ….தமிழக சட்டமன்றத்தில் இந்தப் படம் திறக்கப்பட்டது 1964. பக்தவத்சலம் அவர்கள் ஆட்சி. இதற்கு முன்பே 1960 லியே மத்திய காங்கிரஸ் அரசு தபால் தலையாக வெளியிட்டது. சட்டமன்றத்தில் படத்தை வைக்கும் முன் நிறைய விவாதம் நடந்துள்ளது.்பிராமணத் தரப்பு *இவ்வளவு அரிய தத்துவங்களை எழுதியவர் பிராமணராகவே இருப்பார்…எனவே பூணூல் இருக்க வேண்டும் * என்று வாதம் செய்தனர்…..முதலில் குறுக்கு சால்வை இன்றி வரைந்துள்ளார்…பூணூல் பிரச்சனை வந்த பின் பொதுவாக இருக்கட்டும் என்றே வெண்ணிற சால்வை வரைந்தார் என்கிறது குறிப்பு. காமராசர், அண்ணா,கலைஞர், பக்தவத்சலம் , கலைஞர், ஜீவா, பாரதிதாசன், கண்ணதாசன , கி.ஆ.பெ…..மு.வ
போன்ற அறிஞர்கள் ஏற்றுக் கொண்டே சட்டமன்றத்தில் திறக்கப் பட்டது. அன்றைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேன் அவர்களே வந்து திறந்து வைத்தார்..அண்ணா ஆட்சியில் அலுவலகங்களில் வைக்க உத்தரவிட்டார்….இதுதான் நடந்தது
