
கனமான மழை வரும்,
பலமான காற்று வீசும்,
தொலைக் காட்சி செய்தி
அருகே சென்று ஃப்ளாஷ் நியூஸ்
உற்று நோக்கினால்
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பள்ளி கல்லூரி விடுமுறை
துள்ளி குதித்தாள் ஹையா.
சாப்பாட்டு டப்பா ரெடி.
இவளை அனுப்பி விட்டு
அவள் செல்வாள் அலுவலகம்.
போச்சு எல்லாம் சொதப்பல்.
தொலை பேசியில் விடுப்புக்கு
விண்ணப்பிக்க,
எகிறினார் மேலாளர்.
நற நற பல் கடித்தல் தெரிகிறது.
ஒழி என ஒரு வழியாய் கிட்டியது,
‘இன்று மட்டும்தான்’ கண்டிஷனோடு.
சட்டென இருவர் முகத்திலும் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு தெரிய
வெளியே வந்து பார்த்தால்
பளீரென்று வெயில் சுட வெளிச்சம் காட்டி ஈ என்று இளித்தது வானம்.
By
A M Shanthi

அருமை தோழி…படிக்கும் போதே கூடவே நினைவு அடுக்குகளில் தங்களின் முக பாவங்களும் இனிய சிரிப்பும் உடன் வருகிறது…சூழலுக்கேற்ற கவிதை
புன்னகையுடன் உங்கள் விமர்சனம்.மிக மிக நன்றி தோழி.
Arumayana kavithai
நன்றி ஜவஹர்.
அருமை
நன்றி தோழர்
அற்புதமான கவிதை!! சிறு வயதுக்கே அழைத்து செல்கிறது. ❤️👌🏻👏🏻👍🏻
தங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அருண்.
அருமை.இது போன்று இன்னும் நிறைய பகிரவும்.
நன்றி தோழி. நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
Arumai. Late comment. Very nice
Thank you very much CKV Mam.🙏