
எனக்குத் தெரிந்து
எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள்
ஆனால்
சிலர்தான் கவிதை வாசிக்கிறார்கள்
சரி, நான் சொல்வது சரியா?..
சிலர் இவர் கவிதையை
வாசிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவும் செய்கிறார்கள்
சரி, நான் சொல்வது
சரியா?..
வேறு சிலர் அவர் கவிதையை
வாசிக்கலாமா வேண்டாமா என்று
யோசனை செய்கிறார்கள்.
சரி, நான் சொல்வது
சரியா?..
யாரும் யார் கவிதைப் புத்தகமும் வாங்குவதில்லை
ஏனென்றால்
அவரவர் கவிதைப் புத்தகங்கள் கைகள் நிரம்ப
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நான் என்னுடைய கவிதைப் புத்தகத்தை
அவர்களிடம் நீட்டும் தருணத்தில் அவர்களும்
அவர்கள் கவிதைப் புத்தகங்களை கண்
சிமிட்டும் நேரத்தில் நீட்டி
விடுகிறார்கள்
ஆனால்
நாங்கள் மற்றவர்
கவிதையைப் படிப்பதில்லை
புன்சிரிப்போடு மற்றவர்
கவிதைப் புத்தகத்தை வாங்கி மூலையில் வைத்து விடுகிறோம்
