வாழ்தல் என்றால் என்ன..?/ அனங்கன்

வாழ்தல் என்றால் என்ன…?
இந்தக் கேள்வியை உங்கள்
மனதிற்கு மிகமிக நெருக்கமாய் நின்று கேளுங்கள்.

அதற்கான பதில் ஒன்றுபோல்
இருக்குமென்று சொல்வதற்கில்லை.

ஒவ்வொருவரும் வாழ்வதற்கான உயிர்ப்பு
வெவ்வேறு நிலையில் இருக்கும்போது….
“இதுதான் அது” என்று யாரால்
அறுதியிட்டுச்சொல்ல முடியும்.

காலமாற்றத்திற்கு ஏற்ப நமது
ஈர்ப்பு நாளொரு திசையில்
மாறிக்கொண்டிருக்கும்போது…”நான் வாழ்ந்துவிட்டேன்” என்று பெருமையாக நம்மால்
நிறைவடைந்து விடமுடியுமா..?

முதலில் நமக்காக வாழ்ந்த
தருணங்கள் எதுவென்று எதாவது உங்கள் நினைவில்
இருக்கிறதா….?

அப்படி ஒன்று இல்லையென்று உங்கள் பெருமூச்சிலிருந்து புரிகிறது…

என்னை எடைக்கல்லாய்
வைத்து உலகத்தை நான்
எடைபோடவில்லை….

இப்போது சொல்லுங்கள்
“வாழ்தல்” என்றால் என்ன…?