இன்று
பெங்களூரிலிருந்து
சென்னைக்கு
கிளம்பலாமென்று
நினைக்கிறேன்

ஆனால்
பெண் காலையில்
போன் செய்தாள்
கடுமையான மழை
என்று..
உடனே யோசனை
செய்தோம்
எப்படியும் கிளம்பி
வந்து விடலாமென்று
காலம்காலமாக
மழை பெய்கிறது
மழையில்
எத்தனையோ
பேர்கள்
உலகம் முழுவதும்
பயணம் செய்த வண்ணம்
இருக்கிறார்கள்
மழை ஒரு தத்துவம்..
மழை ஒரு காதலி..
மழை ஒரு புரிந்துகொள்ள
முடியாத நண்பன்
