இகம் மாறிய கணம்/வசந்ததீபன்


அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
நிறம் அழிந்தது
அழகு கலைந்தது
பூச்சிகள் அரித்தது
நிலை குலைந்தது
கிழிந்து போனது
தூர எறிந்ததும்
நானற்றுப் போனது.

🦀