ஆசாரக் கோவை—4/வளவ. துரையன்

  1. முந்தையோர் கண்ட நெறி
    (இன்னிசை வெண்பா)

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள் விளக்கம்:

விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது வாழ்விற்கு சிறந்தது என்பதே நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறையாகும்.