
ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!
ஐஞ்சு காசுக்கு டிக்கெட் எடுத்து ரயிலில் போவேனே.!
குபுகுபு வண்டியில் குதுகுலத்தோடு ஊருக்கு போவேனே!
பாசப் பிணைப்பில் பாப்பாவோடே வண்டியில் போவேனே!
பட்டாம் பூச்சிகள் சிறகுகள் அசைய பயணம் போவேனே!
கூட்டாஞ்சோறு ஆக்கி திங்க வண்டியில் ஏறுங்கோ..
குழந்தைகள் நடுவே குழந்தைகளாக நீங்களும் மாறுங்கோ!
சண்டை சத்தம் ஏதும் இல்லா உலகம் பாருங்கோ..
சகலரும் இங்கே குழந்தைகளாகி மகிழ்ந்திட வாருங்கோ!
