
மனிதர்கள் வாழும் பூமியை
மனிதா நீயும் சுற்றிடு
சுற்றுப் பயணம் உனக்கு
கற்றுக் கொடுக்கும் பாடம்
மனிதர்கள் மொழியும் வேறு
மனிதர் உணவும் வேறு
மனிதர் நிறமும் வேறு
மனிதர் கலையும் வேறு
மனிதர் மதங்கள் வேறு
மனிதர் மனமும் வேறு
மனிதர் பணமும் வேறு
மனிதர் உடையும் வேறு
வாழும் மனிதரைப் பார்த்தால்
வாழ்க்கையில் இத்தனை விதமா?
மனதில் கேள்விகள் தோன்றும்
மனிதர்கள் புதிராய் தெரிவர்
