
ஒரு விரல் தொட்டு
உன் பெயரெழுதும் தனிமை
ஒரு குருவிக்குஞ்சின்
அலகைப் போல
என் பொழுதுகளை
கொத்தி தீர்க்கிறது
அதன் நிமித்தம்
இரவை கருந்திரவமாக்கி
ஒரு சீசா புட்டியில்
அடைத்து வைக்கிறேன்
உள்ளே ஒரு கருப்பு ஓவியம்
விரிகிறது
அதுஒரு முகமாக ஆகுமென்று
நான் நினைத்துக்
கொண்டிருக்கும் போதே
ஒரு சிலுவையாக மாறிப் போனது
கருப்பு சிலுவையாக
