
தப்ப முடியாது
தப்பினாலும்
தவறு என்று
சொல்ல முடியாது.
வேகங்கள் கெடுத்தன
அழைப்பவனுக்கும்
வேகங்கள் பல உண்டு
உண்டு உண்டு.
வக்கிரங்கள் யாவும் சேர்ந்தே
மனிதன் ஒன்று
ஆகின்றன.
காலிரண்டு
ரெண்டு வழி போகாது
கண்ணிரண்டு
ரெண்டு வழி நோக்காது
வாய் ஒன்று
உதடிரண்டு
பலவும் பேசும்
காதிரண்டு
பலவும் கேட்கும்
எத்தனை விதமான கோணங்கள்
கோணத்திற்கு
ஒரு வேகம்
திரியும் கோணங்கள்
தப்ப முடியாது.
