இலக்கிய இன்பம் 64/
கோவை எழிலன்


அளவறிந்தூட்டு தாய்

நாற்று நட்டபின் நாற்றங்காலில் பாய்ச்சும் நீரானது அளவிற்கு குறைவாகவும் இல்லாமல் மிகுதியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தொண்டைவள நாட்டு மக்கள் தன் வயல்களில் நீர் பாய்ச்சுவதை விளக்குகிறது காஞ்சிப் புராணம்.

எவ்வாறு ஒரு தாய் தன் குழந்தைக்கு அளவறிந்து முலைப்பால் ஊட்டுவாளோ அவ்வாறு உழவர் தன் வயலுக்கு முளைநீர் பாய்ச்சி அதை தன் மகவு போல் போற்றி பாதுகாத்தனர்.

சிவஞான சுவாமிகளின் இந்த உவமை மிகப் பொருத்தமாக இங்கு அமைகிறது.

இளமகப் பசிதனக்
கேந்து கொங்கைபால்
அளவறிந் தூட்டுதாய்
மான ஆறறி
களமர்கள் முளைபுனல்
செவ்வி கண்டுநீள்

வளவயல் பாய்த்தித்தம்
மகவின் ஓம்புவார்”

மற்றுளோர் அமிழ்வதல்ல