
உற்சாகத்தோடு
பகலை
அழைத்துக்கொண்டு
பேருந்துக்குள் நுழைந்தேன்
நீண்டப் பயணத்தில்
பகல் இரவையும் துணைக்கு அழைத்துக்கொண்டது
மூவரும் இனிக்கப் பேசி வந்த பொழுதுகள் மெல்ல,மெல்ல கசந்தன.
சலிப்பைத்தட்டியப்
போதெல்லாம்
தாயின் மடியைப்போல்
கதகதப்பைத் தரக்காத்திருந்தன
அவரவர் இருப்பிடம்
