காற்று/கலாவதி பாஸ்கரன்

மனம் குளிர்த் தென்றலாய்
மரம், செடி, கொடி, மனிதர்களை
அழகாய், ஒயிலாய், அசைத்தாடி
மயக்கி மகிழ வைப்பாய்.
கடும் கோடையில் கடற்கரையில்
அலைகளுடன் நடமாடி
நாடி வருவோர்க்கு
ஆனந்த காற்றளித்து
ஆறுதல் அளிப்பாய்.
பனி பொழியும் இரவுகளில்
கடும் குளிர் காற்றாய்
வந்து எமைத் தாக்குவாய்.
பெரு மழையுடன் ஆட்டம் போட்டு
ஆக்ரோஷப் புயலாய்
கோர தாண்டவம் ஆடி
மரம் செடி கொடிகளை வீழ்த்துவாய்
மண் வாழ் மனிதரைப் போல்
உனக்கும் எதிர்மறை குணங்கள் உண்டோ?
ஆனாலும்
உன்னை எதிர்க்கும் துணிவு
எமக்கில்லை,
நீயின்றி உயிர்க்கு
வாழ்வும் இல்லை!

One Comment on “காற்று/கலாவதி பாஸ்கரன்”

Comments are closed.