
திருவாரூர்க் கமலம் அவள்
காயமெனும் மருந்து கொண்டு
ரஸவாதம் புரிகின்றாள்
மாக்ஸ்ஃபாக்டர் தேவையில்லை
மனமே அவளைக் கன்னியாக என்றும் காண
உதவு புரிகின்றது.
நித்தியமான கன்னியாவாள்
ஆசை அடங்க அடங்க
ஓயாது ஆசை ஊட்டுபவள்.
வேறு எவளிடமும் இல்லது
சரக்கு அவளிடம் ஒன்றுமில்லை.
இல்லை என்று காண இயலாது.
திருவாரூர்க் கமலம் அவள்
ரஸவாதம் புரிகிறாள்.
