ப.மதியழகன்

எனக்கு மேலே இருக்கும்
வானத்தை
கிளிகள் கூட்டம் கடந்து சென்றது
அப்புறம் ஜோடிப்புறா
அப்புறம் சாம்பல் குருவி
அப்புறம் மைனா
அப்புறம் பருந்து
வானம் அப்படியே தான்
இருந்தது
திசைகள் தான் வெவ்வேறு
எனக்கு மேலே இருக்கும்
வானத்தை
அவைகள் வியாபித்துக்
கொண்டன
அவைகளுக்கு மேலே இருக்கும்
வானத்தைப் பற்றி
அவைகள் பொருட்படுத்தவே இல்லை
வானத்துக்கு ஏது
மேல் கீழ்!
