ஏன்?/க நா சு

இங்கே எப்போதோ?
ஒரு தரம்
வந்து இருந்திருக்கிறேன் –
இன்றும் இங்கேயே
இருப்பதென்னேயோ!

இதே காரியத்தை
முன் ஒரு தரம்
செய்திருக்கிறேன் –
இன்றும் இதையே
செய்வதென்னேயோ!

இதே சொற்களை இப்படியே
கூட்டிச் சொல்லிக்
குவித்திருக்கிறேன் –
மீண்டும் இன்று
குவிப்பதென்னேயோ!

May be a black-and-white image of 1 person and eyeglasses

1Chandramouli Azhagiyasingar