ஆசிரியர் கடிதம்

23.10.2021 – சனி


ஆசிரியர் கடிதம்


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

எப்படி இந்த இதழைத் தினமும் கொண்டு வரப் போகிறீர்கள்?  இதைப் பற்றி கவலை அதிகமாக இருக்கிறது.  தினமும் எதாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால் அது சாத்தியமா? இப்படிக்கு,

வாசகன்


அன்புள்ள வாசகருக்கு,


வணக்கம்.

உங்கள் கடிதம் கிடைத்தது. எனக்கே தெரியவில்லை.  ஒரு மாதம் ஆகப்போகிறது.  தினமும்தான் எழுதிக்கொண்டு போகிறேன்.  பலருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்துகொண்டிருக்கிறேன்.  ஆனால் இந்த இணைய இதழ் பற்றி தீர்மானமாக எதுவும் சொல்ல முடியவில்லை.  போகிறவரைப் போகட்டும் என்று தோன்றுகிறது.


அன்புடன்,

அழகியசிங்கர்