
உனக்கு மட்டுமான ஒன்று
உன் தேகமும் காயம் தான்
உன் நோவும் காயம் தான்
உள்நோவோ ஆறாத காயம்
உனக்கான உண்மையை சொல்வதில்
என்ன பயன்?
வானில் பறக்கும் பறவைகள்
அதைக் கிழிப்பதில்லை
ஆனால், விமானங்களில் மோதி
சிதைத்து விடுகின்றன; சிதைந்தும்
மாலைகள் கழுத்தில் விழ
அனைவருக்கும் தான் ஆசைகள்
ஆழ புதைத்து விடு உண்மையை
போட்டுவிடு மாலைகளை
உன் உள் காயம் பற்றி யாருக்கு என்ன கவலை?
உண்மைகள் ரகசியமானவை அல்லவா?
உன் தேகத்தின் அந்தரங்கங்களைப் போல
