இரு கவிதைகள் /சுரேஷ் ராஜகோபால்

  1. குயிலே குயிலே

ஓங்காரமாக ரீங்காரமிடும்
குயிலொன்றைக் கண்டேன்
குரலுக்கும் உருவத்துக்கும்
கொஞ்சம் கூட
சம்மந்தம் இல்லையே!

குயிலே நீயொரு திறமைசாலியே
காகம் கூட்டில்
முட்டையிட்டு குஞ்சு வளர்த்திடும்,
அழகாகக் கூவமட்டும் தெரிந்த
உனக்கு, கூடுகட்டத் தெரியாதோ?.

2.சொரணை கெட்ட மனிதன்

பக்கத்துக்கு வீட்டிலே
பகல் கொள்ளை
எதிர் வீட்டிலே
இரவுக் கொள்ளை
காலை மாலை எதையும்
விட்டு வைக்காமல்
கொள்ளை அடித்து
எடுத்துச் சென்றனர்.

காலம் காட்டும்
தினசரியை வைத்துக் கொண்டு
அது சரி இது சரி என்றே
திகைத்துப் பேசுகிறோம்

வெகுண்டெழ நாம் ஒன்றும்
மானம் உள்ள மனிதரில்லையே!

நாம்தான் சொரணை கெட்ட
ஜென்மம் ஆனோமே!.