மூன்று கவிதைகள் /மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஞாயிறு..

ஞாயிறவன் உதயம் இல்லையெனில்
ஞாலமெலாம்
இருட்டில் வசிக்கும். பூ மாதின்
புன்னகைதான் ஏது.
உலகில் அவனாட்சி வசமானால்
உயிர்களில்
அறிவாட்சி கோலோச்சும். அதுவே
ஆளுமை என்றாகும்.

காக்கை

காக்கைகளின் மாநாடு கண்டு
வந்தேன்.
நானும்.’ ஒற்றுமை குறைந்து
போனதாம்,
விருந்தோம்பல் நின்று
போனதாம்’
கட்டுக் கோப்பாய் வாழ்ந்திடத்
தீரமானம்.
ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது

வெள்ளை மயில்.

வண்ணமயில் நீ வெள்ளைநிறம்
கொண்டதுதான்
ஏனோ? சொல்லிலும்,செயலிலும்
தூய்மை கொள்
என்பாயோ ! நானிலம் வாழ தவம்
செய்வாயோ !
நாட்டுக்கு நாடு,வீட்டுக்கு வீடு
சமாதானத் தூது
போவாயோ ! மகா மௌனம்
கலைத்து
பதில் சொல் அழகு மயிலே !!!