பயணம்/ தங்கேஸ்

விழிகளின் தீண்டல்களில்
விரல்களின் ஸ்பரிஸங்களில்
பொழிந்து விடுகிறது என் மேகம்

பார்வையின் கோடியிலோ
உரையாடலின் துவக்கத்திலோ
நுரைத்துப்பொங்குகிறது
என் கடல்

உதட்டுச்சுழிப்பிற்கோ
இமையின் தாழலுக்கோ
சுருங்கிப்போகிறது
என் வானம்

கண்ணீர் துளிக்கோ
ஒற்றை வார்த்தைக்கோ
முடிந்து போகிறது
என் உலகம்

திசையற்ற பயணத்திற்கோ
முடிவற்ற கணத்திற்கோ
தொடங்கிவிடுகிறது
என் பயணம்

வெற்றிடத்திற்கோ
அல்லது வேறு எதற்கோ
பறந்து செல்கிறது
என் பறவை
பறந்து செல்கிறது
என் பறவை