
பேசும் அதிசயக் கிளியை
விலை கொடுத்து
ஆசையாய் வாங்கி
பல மணிக்கூறு
பாடம் எடுத்து
பெயர்களைக்
கூறுகையில் குதூகலித்தவன்,
அலங்காரக் கூண்டு வாங்கி ,
உணவு படைத்து
ஊரார் திரள
காட்சிப் பொருளாய் ஆன
கிளியின்
சுதந்திரம் பறித்தவன்
ஊருக்கு பறை சாற்றுவான்
அதன் நண்பன் என்று
சிறை பிடித்து
அடிமைப் படுத்தும்
அரக்கன்.
