இலக்கிய இன்பம் 65 /கோவை எழிலன்

மற்றுளோர் அமிழ்வதல்ல
இன்றைய சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றிய ஒரு பார்வை. தீண்டாமை என்பது ஒரு வரைத் தழுவிக் கொள்ளல் திருமணம் செய்து கொள்ளல் போன்றவற்றால் மட்டும் தீராது. இருவரிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று அறிவதனாலேயே தீரும். இருவர் சமநிலை அடைவது என்பது ஒருவரைத் தாழ்த்தி அடைவதன்று மற்றவரை உயர்த்தி அடைவதே.

நாமக்கல் கவிஞரின் எளிய இந்தப் பாடல்கள் இந்த உண்மையை எளிய தமிழில் விளக்குகின்றன

“தீண்டாமை போவதென்றால் தின்பதும் உண்பதல்ல
தீண்டாமை தீர்வதென்றால் தீண்டியே ஆவதல்ல
தீண்டாமை விலக்கலென்றால் திருமணம் புரிவதல்ல
தீண்டாத(து) என்றோர் ஜாதி இலையெனத் தெளிவதேயாம்

தாழ்ந்தவர் உயர்வதென்றால் உயர்ந்தவர் தாழ்வதல்ல
வீழ்ந்தவர் எழுவதென்றால் நின்றவர் வீழ்வதல்ல
ஆழ்ந்தவர் உயிர்ப்பதென்றால் மற்றுளோர் அமிழ்வதல்ல
வாழ்ந்திட வேண்டும் எல்லா மனிதரும் என்பதேயாம்.”