சுட்டும் விழிச் சுடர்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

சுட்டும் விழிச் சுடரில் ஒட்டிய
கன்னம்
மின்ன,
தலைப்பாகை மானம்
காட்ட,
துருத்திய எலும்பு மூடும்
கருப்பு மேலங்கி
தைரியம் சொல்ல,


பாட்டாலே
வையமது
வாழப் பாதை காட்டிய
வீரமறவனே!
உன்பேர் சொன்னால்,
காக்கை
குருவியும்
தமிழ் பாடும் .
கடலும் மலையும் எதிரொலிக்கும்.

இனிய மகாகவி
பாரதி தின நல்வாழ்த்துகள்.