தமிழ்த்தாயின் அணிகலன்கள்/அனங்கன்

இத்தனை நூல்கள் இருந்தாலென்ன….
எதுவும் மாறவில்லை…
காப்பியங்கள் கூறும் கதைகள் எதுவும்
மனிதத்தைப் போற்றவில்லை.

எத்தனை அறங்கள் எம்மொழியிலும்
இதுபோல் நூலாய் வந்ததில்லை.
நோய்மிகும் இடத்தில் மருத்துவம்
பெருகும் பொருந்திப் பார்க்கமுடியவில்லை.

இருண்டகாலத்தில் வந்தஔி
இவை காரணம் புரியவில்லை.
தேடிஅலைந்த தமிழ்த்தாத்தாவைத்
தமிழ் உலகம் மறக்கவில்லை.

பன்னெடுங்காலம் திருக்குறள்
மறைந்த காரணம் தெரியவில்லை…
அதை மீண்டும் தந்த அயோத்திதாசன்
தாத்தனைக் காலம் மறைக்கவில்லை.

தமிழ்த்தாயின் அணிகலன் போல
இவையின் மதிப்பிற்கு ஈடில்லை.
இந்த நூல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்
என்றும் நிலைக்கும்….
தமிழன் அஞ்சிடத் தேவையில்லை.