ஆரம்பிப்பதும்  முடிப்பதும்/அழகியசிங்கர்

ஒரு கவிதையை
எப்படி ஆரம்பிப்பது
என்று உங்களுக்குத் தெரியுமா?

அல்லது
எப்படி முடிப்பது
என்றாவது தெரியுமா?

நீங்கள்
அலுப்பில்லாமல்
தினம் தினம் கவிதை
எழுதிக் கொண்டு வருகிறீர்கள்

யார் படிப்பார்கள்
என்று கவலைப்படாமல்
கவிதை எழுதிக்கொண்டு
வருகிறீர்கள்

உங்கள் கற்பனைகளைக்
கவிதை மேல் ஏற்றுகிறீர்கள்

ஆனால்
எப்படி கவிதையை முடிப்பது என்று
உங்களுக்குத் தெரிகிறதா?

அல்லது எப்படி ஆரம்பித்தீர்கள்
என்பதாவது புரிகிறதா?

இதுதான்
எல்லோருக்கும் பிரச்சினை

ஆரம்பிப்பதும்
முடிப்பதும் தெரியாமல்
இருப்பது

என் பிரச்சினை
இந்தக் கவிதையை
எப்படி முடிப்பது
என்று எனக்கே தெரியவில்லை