கஞ்சிஞ்ஜங்கா/க நா சு 

 மலை மேலே பனி மூடியிருப்பதைப்

எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது

டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்றுகஞ்சிஞ்ஜங்கா

பார்த்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு

இப்போது பார்க்கிறேன். வித்தியாசம் ஒன்றும் 

தெரியவில்லை. என் கண் தான்

சற்று மங்கி விட்டது.