பட்டாம்பூச்சி/A M சாந்தி

இரவு படுக்கும் முன்
திறந் திருக்கும் சன்னலை
மூடும் பொழுதுதான் பார்த்தேன்
அந்த பட்டாம்பூச்சியை.
என் படுக்கையில் அசையாமல்.
நான் தான் எங்கே தூக்கத்தில்
நசுக்கி விடுவேனோ என்று
கை தட்டி பறக்க வைத்தேன்.
பட்டென்று பறந்து சுவற்றில்
உட்கார்ந்து கொண்டது.
காற்றாடி போட்டால்
வம்பு என்று வாளா இருந்தேன்.
யார் நீ ? தூங்காமல் தனித்திருக்கும்
எனக்கு தாலாட்டு பாட வந்தாயோ?
நேரத்தில் உண்ட உணவு செரித்து விட
பசியோடு புரண்ட எனக்கு,
நறுமலர் தேன் கொணர்ந்தாயோ?
ஏதோ பழைய நினைவுகள்
மனதை குழப்பிட ஆறுதல் தர வந்தாயோ?
மார்கழி குளிர் இரவில் அடைக்கலம்
தேடி சிலு சிலுன்னு வந்தாயோ?
இல்லை மலரென்று எனை
எண்ணி என் மாளிகையில் புகுந்தாயோ?
ஆடாமல் அங்கேயே இரு.
பொழுது விடிந்ததும் என்
பேத்திக்கு அறிமுகக்க வேண்டும்.

.

9 Comments on “பட்டாம்பூச்சி/A M சாந்தி”

  1. Wow! Superb Shanthi Aunty😍
    I loved it…
    Words are simple as well as attractive..
    Even a normal person can understand…
    Lovely and fantastic lines👌👌👌
    Even I could imagine the scene while I was reading ur poetry…
    Keep on writing… 💐💐💐💐
    All the best for your future works….

  2. அழகிய ஓவியம் போன்ற கவிதை👏🏻.
    மார்கழி பனி காற்று மேலே தழுவிய தருணங்கள் நினைவுக்கு வருகிறது்

Comments are closed.