
தனக்கென ஓர் வீடு இலாத
மக்கள்
எங்கும் உண்டு, இவர்கள்
நடைபாதை
ஓரங்களில் வாழ்வதுண்டு.
கலகம்,கொந்தளிப்புச் சூழல்
வெறியாட்டம்
போட ,அகதிகளாகி நாடிலாது
வேற்று
நாட்டில் நடைபாதை வாசிகள்
ஆனவர் அனேகர்.
ஏதுமற்றோர், அகதிகள் என
மாற்று
முகவரி இவர்களுக்கு உண்டு.
ஆனால்,
நெஞ்சில் ஈரமும், கண்ணில்
கருணையும்
காலாவதியாக நொடிதோறும்
தம் முகம்
மாற்றிக் காட்டித் திரிவார்.
இன்னார்
இவரென இவரை எவர்
அறிவார்?
தெரெசா என்றால் கருணை,
காந்தி
என்றால் அகிம்சை, ஜான்சி
என்றால்
வீரம் இப்படி முகவரிகள்
உண்டு.
இதில் மானுட குலத்திற்கு
தினை
அளவும் உதவாத முகங்கள்
முகவரி
தொலைத்தவையோ ? சொல்வீர் !!
