
வார்த்தையெனும் வாளெடுத்து
புத்தி எனும் கேடயம் தாங்கி
அனுபவம் எனும் புரவியேறி
காலமெனும் வெள்ளத்தைத்
தடுத்து அணை போட முயலுங்கால்
வார்த்தைகள் தடுமாறப்
புத்தியோ பேதலிக்க
அனுபவப் புரவி காலிடற
கால வெள்ளமீதுற
அணை ஓட்டையாப் போச்சு.
நினைத்ததே போதும்; சாதிக்க வேண்டிய
அவசியமில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.
